Friday, November 25, 2011

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் முன்னாள் சட்டத்தரணி மொஹான் பீரிஸ் வெளியிட்ட கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்!

Friday, November 25, 2011
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் முன்னாள் சட்டத்தரணி மொஹான் பீரிஸ் வெளியிட்ட கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மொஹான் பீரிஸ் அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பிரகீத் தொடர்பில் வெளியிட்ட கருத்தை அரசாங்கத்தின் நிலைப்பாடாக கருத முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரகீத் எக்னெலிகொட வெளிநாடொன்றில் அடைக்கலம் புகுந்துள்ளதாக மொஹான் பீரிஸ் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து தொடர்பில் இராஜதந்திர ரீதியில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஊடக அமைச்சர் என்ற ரீதியில் எக்னெலிகொட தொடர்பில் தாம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment