Friday, November 25, 2011மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழைக் காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏழு நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 239.3 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர அதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக படுவான்கரை பிரதேசத்தின் பல வீதிகளின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை படுவான்கரை மண்டூர், வெல்லாவெளி வீதி, 38 ஆம் கொலனி, நவகிரி நகர் தும்பளை ஆகிய இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு வாகரை, கோறளைப்பற்று, ஏறாவூர் பற்று, ஏறாவூர், கிரான், வவுணதீவு போன்ற பகுதிகளும், தாழ்நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு வாவியை அண்டிய பிரதேசங்களில் நீர்த்தேங்கி காணப்படுதால் பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் தொழிலுக்காக செல்வோரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் திருகோணமலை மாவட்டத்தில் சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா, மூதூர், முள்ளிப்பொத்தானை, திருமலைநகர் போன்ற பகுதிகளில் உள்ள தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று காலை காற்றுடன் பெய்த கடும் மழை காரணமாக வீதிகளும் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வடபகுதியில் மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகர், பேசாலை, தலைமன்னார் போன்ற பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ் நிலப்பகுகுதிகள் நீரிழ் மூழ்கியுள்ளன.
No comments:
Post a Comment