Friday, November 25, 2011

துமிந்த சில்வாவுக்கு ஏற்பட்ட காயங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

Friday, November 25, 2011
கொலன்னாவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டினால் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துமிந்த சில்வா சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தாக்கல் செய்த நகர்த்தல் பிரேரணையொன்றை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் பாரத லஷ்மன் பிறேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் காயமடைந்ததாகவும் நகர்த்தல் பிரேரணையை தாக்கல் செய்த சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

எனினும் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் தொடர்பாக இதுவரை விசாரணை நடத்தவில்லை எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து துமிந்த சில்வா தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் அவருக்கு காயம் ஏற்பட்ட விதம் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

இந்த வாதங்களை கவனத்திற்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டி அல்விஸ் துமிந்த சில்வாவிற்கு சிகிச்சையளித்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து அறிக்கைகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை நீதினமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment