Friday, November 25, 2011

மாலைதீவில் பெண்கள் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - நவனீதம்பிள்ளை!

Friday, November 25, 2011
மாலைதீவில் பெண்கள் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

மாலைதீவில், திருமண பந்தத்திற்கு புறம்பான முறையில் பாலியல் உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் மனிதாபிமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக நாடொன்றில் பெண்களுக்கு எதிராக இவ்வாறான அடக்குமுறைச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சட்டம் தொடர்பில் பொது விவாதம் நடத்தப்பட வேண்டுமென தாம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மாலைதீவில் கடமையாற்றி வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் கோரியுள்ளார்.

300,000 சனத்தொகையைக் கொண்ட இஸ்லாமிய நாடான மாலைதீவில் வேறும் மத வழிபாடுகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு புறம்பாக பாலியல் உறவில் ஈடுபடும் பெண்களுக்கு 30 கசையடிகள் வழங்கப்படுகின்றன. நவனீதம்பிள்ளை மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு மாலை தீவு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment