Friday, November 25, 2011

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடப்படும் - அவுஸ்திரேலியா!

Friday, November 25, 2011
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கெவின் ரொட் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் கருத்து வெளியிட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடமும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்து கொண்ட போது தாம் இதனைக் குறிப்பிட்டதாக கெவின் ரொட் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment