Friday, November 25, 2011மதுரை:இலங்கையில் புலிகள் அழிவுக்கு பின், அங்குள்ள தமிழர்களை பாதுகாப்பதாக கூறி, தமிழகத்தில் நிறைய இயக்கங்கள் தொடங்கப்பட்டன. தமிழ்
இயக்கம் என்ற பெயரில் அரசியல் மற்றும் ஆதாயம் தேடுபவர்களை நம்பி, இனி பயனில்லை, என, நினைத்த ஒரு தரப்பினர், "இலங்கை இந்து மக்கள் பாதுகாப்பு பேரவை,' என்ற அமைப்பை நேற்று மதுரையில் தொடங்கினர்."இலங்கையில் பலியானவர்கள் தமிழர்கள் அல்ல, இந்தியாவை சேர்ந்த இந்துக்கள்' என்பது
இவர்களின் வாதம். இதன் தலைவராக நியமிக்கப்பட்ட கர்நாடகாவின் பிரமோத் முத்தாலிக் பேசியதாவது:அரியானாவின் 33 ஆண்டுகளுக்கு முன் நடந்த கற்பழிப்பையும், 18 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் இஸ்ரத் என்பவர் மீதான "என்கவுன்டர்' குறித்தும், தற்போது விசாரிக்கின்றனர்.
இலங்கையில் நடந்த கொலை, குறித்து மத்திய அரசு வாய்திறக்கவில்லை. மாநில பிரச்னைகளால், நாம் தனித்தனியே போராடி வருகிறோம். பிரிக்கப்படாத முந்தைய இந்தியாவின் குடிமக்கள் என்ற முறையில், நாம் எழுச்சி பெற வேண்டும். இலங்கையில் கொல்லப்படுபவர்கள், இந்தியாவின் இந்துக்கள். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இது
குறித்து விழிப்புணர்வு யாத்திரை தொடங்கும், என்றார். "இந்தியர்' என்ற முழக்கம் தான், இனி இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் என்பது இவர்களின் கருத்து.
அமைப்பின் செயலாளராக அர்ஜூன் சம்பத் பொறுப்பேற்றார். மதுரை ஆதினம், பேரூர் மருதாச்சல அடிகள், ஆந்திராவின் நாகராஜ் நாயுடு, தேசிய பார்வார்டு பிளாக் தலைவர் முருகன்ஜி, புலிகள் இயக்கத்தின் ஜோதி அருட்செல்வம்(முல்லைத்தீவு) நேரில் வாழ்த்தினர்.
No comments:
Post a Comment