



Friday, November 11, 2011சார்க் பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும் பிரதான சவால் பயங்கரவாதமாகும். இந்த பயங்கரவாதத்தை அடக்கியதால்தான் இலங்கை இன்று பெரு வளர்ச்சியடைந்து வருகி றது. பயங்கரவாதத்தை ஒழிப்பதன் மூலமே நமது பிராந்தியத்தை வளம்பெறச் செய்ய முடியும். இதற்காக சார்க் நாடுகள் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான சிறந்த தருணம் இதுவாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
17வது சார்க் உச்சி மாநாடு நேற்று மாலைதீவில் ஆரம்பமாகியது. இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் கூறியதாவது, இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து நான் பெருமையடைகிறேன்.
எங்களுக்கு அளித்த சிறப்பான வரவேற்புக்காக நான் மாலைதீவு ஜனாதிபதிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் எமது தூதுக்குழு சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாலைதீவு ஜனாதிபதி நiட் அவர்களே, சார்க் அமைப்பின் தலைமைப்பதவி உங்களுக்கு இன்று கிடைத்திருப்பது உங்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். சார்க் அமைப்பின் முன்னேற்றத்துக்காக நீங்கள் எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் நானும் எனது நாட்டு மக்களும் உங்களுக்குப் பூரண ஒத்துழைப்பை நல்குவோம். இதற்கு முன்னர் சார்க் அமைப்பின் தலைவராக இருந்தவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
பூட்டான் இவ்வமைப்பின் தலைமையை ஏற்றிருந்த காலத்தில் அந்நாட்டு பிரதமர் இவ் அமைப்பின் வளர்ச்சிக்கு பிரதான பங்காற்றினார். பூட்டான் மன்னரின் திரு மண நிகழ்வுக்கு நாம் எமது வாழ்த்துக் களைத் தெரிவிக்கிறோம். சார்க் அமைப் பின் செயலாளர் நாயகப் பதவியை முதல் தடவையாக ஏற்றுள்ள பெண்மணியான பாத்திமா டியானா சைட்டுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த உச்சிமாநாட்டின்போது ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட சார்க் அமைப்புத் தொடர்பான சகல ஒப்பந்தங்களும் நடை முறைப்படுத்தப்படுவதுடன், அதன்மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத்துறையில் பிராந்திய ரீதியிலான ஒத்துழைப்புக்கான சிறந்த வலையமைப்பு வலுப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
சார்க் நாடுகளின் மனித வளத்தை அபிவிருத்தி செய்வதில் சகல அங்கத்துவ நாடுகளும் அக்கறைகொண்டு செயலாற்ற வது அவசியமானது. அதன் மூலமே நாம் ஒன்றிணைந்து சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு சமூகத்தில் சம வாய்ப்பற்ற வர்களுக்கு கிராமப் புறங்களிலுள்ள மக்களுக்குப் பாடசாலைகள் உட்பட ஏனைய அத்தியாவசிய வசதிகளை செய்துகொடுப்பதற்காக கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு முன்னுரிமை அளிப்பதுடன் கல்வித் தரத்தை உயர்த்து வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டு மென்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்மூலம் எங்கள் நாட்டு பிள்ளை களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கை யைப் பெற்றுக்கொடுக்க முடியுமென்றும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கை மக்களாகிய நாம் சமூக அடிப் படையில் கல்வி, சுகாதார வசதிகளை சீரமைப்பதுடன், நவீன தொடர்பாடல் வசதிகளையும் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பது அவசியம் என்ற நிலைப்பாட் டில் இருக்கிறோம் என்று கூறினார். இவ் வித சேவைகளைச் செய்வதன் மூலமே எங்கள் மக்களின் அரசியல் பலத்தை வலுவூட்ட முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
சார்க் நாடுகளின் பொது எதிரிகளாக விளங்குவது அறியாமை, நோய் மற்றும் வறுமையாகும். இம்மூன்றையும் ஒழித் துக்கட்டுவதற்கு சார்க் நாடுகளின் அர சாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய சமூக மேம்பாட்டு நடவடிக்கை களை எடுப்பதற்கு எங்கள் பிராந்திய நாடுகளில் முதலில் சமாதானமும், பாதுகாப்பும் நிலைத் திருப்பது அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு அவற்றுடன் சுற்றாடலை பேணிப் பாதுகாப்பதன் மூலம் எமது சமூகங்களை நிம்மதியாக வாழவைப்பதற்கு எதிராகவுள்ள பயங்கரவாதம் போன்ற சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்கு சார்க் அமைப்பு தன்னைத் தயார் படுத்திக் கொள்வது அவசியம் என்றும் அவர் மேலும் கூறினார்.
பயங்கரவாதத்தை முறியடிப்பதில் இலங்கைக்கு நல்ல அனுபவ அறிவு இருக்கிறது என்றும் ஜனாதிபதி கூறினார். எங்கள் நாட்டில் பல தலைமை முறை களாக எங்களுடைய கலாசார பாரம்பரி யங்களும், அபிலாஷைகளும் நிலைத்திருக் கின்றன. இவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் எங்கள் நாடுகளில் நாமே உரிய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
அபிவிருத்திக்கு சார்க் நாடுகள் எவ் விதம் முகம் கொடுப்பது என்பதும் இன்னு மொரு பொதுவான சவாலாக அமைந்தி ருக்கிறது. நாம் அபிவிருத்தி என்று கூறும்போது பொதுவாக பணத்தின் பெறுமதியைப் பற்றி அக்கறை கொள்ளாது நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை எந்த அளவுக்கு அபிவிருத்தியைத் துரிதப் படுத்துவதற்கு கவனம் செலுத்துவது என்பதில் ஆர்வம்காட்ட வேண்டும். இப்பிராந்தியத்திலுள்ள நாட்டு மக்களுக்கு மதங்களின் மீது அசையாத நம்பிக்கை இருக்கிறது. அதன் மூலமே ஒவ்வொரு மனிதனின் மனதிலும் அமைதியும் சமாதானமும் அமையும்.
இதனை அடிப்படையாகவைத்து எங்கள் நாடுகளின் அபிவிருத்தி சித்தாந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவையே எங்கள் நாடுகளுக்கு ஒரு சிறந்த உந்து சக்தியாக அமைய முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சார்க் நாடுகள் ஒன்றிணைவதன் மூலம் உரு வாகும் சக்தியைப் பயன்படுத்தி நாம் எங்கள் நாடுகளில் மக்களுக்கு சேவை செய்வதற்கான கடப்பாட்டினை உறுதிப் படுத்திக்கொள்ள முடியுமென்றும் ஜனாதி பதி கூறினார்.
இன்று எங்கள் நாட்டு மக்கள் அபி விருத்தியை அவசரப்பட்டு மேற்கொள்ள வேண்டுமென்று, பொறுமையிழந்த நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலை எங்கள் மக்கள் சமூகங்கள் ஊடாகவே கற்றுக்கொண்டுள்ளார்கள். ஆயினும், அரசாங்கங்களும் மக்களின் இந்த அவசியத்தை உணர்ந்து காலதாமதப் படுத்தாமல் பொறுமையுடன் இவற்றை நிறைவேற்றுவது அவசியம் என்று கூறினார்.
சமூக நீதி மற்றும் காலநிலை மாற்றம் குறித்து நாம் மேலும் கலந்துரையாடலை நடத்தி அவை குறித்து உடனடி நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அத்து நகரில் நடக்கும் இந்த உச்சிமாநாடு ‘பரஸ்பர தொடர்புகளை உறுதிப்படுத்தி கொள்ளல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறுவது வரவேற்கத்தக்க விடயம் என்றும், இதன் ஊடாக எங்கள் நாடுகளில் அதியுயர் நிலையில் சாதனைகளை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினார்.
இறுதியாக நான் புத்த மகானின் சில அறிவூட்டும் சொற்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். புத்த பெருமான் தனது தம்ம பதத்தில் ‘ஒருவர் தன்னால் மட்டுமே அமைதியைப் பெற்றுக்கொள்ள முடியும். இதுவிடயத்தில் எந்தவொரு எஜமானுக்கும் எதுவும் செய்யமுடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.
No comments:
Post a Comment