Friday, November 11, 2011பிரச்னைகள் தீரும் வரை இலங்கை செல்ல மன்மோகன் சிங் மறுப்பு!
இந்த சந்திப்பு முடிந்ததும், இலங்கை அதிபர் ராஜபக்ஷே, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர்கள் மறு குடியமர்த்தும் பிரச்னை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து, பிரதமர் விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இலங்கைக்கு வருமாறு, மன்மோகன் சிங்கை ராஜபக்ஷே அழைத்தார். எனினும், இலங்கைத் தமிழர்கள் மறு குடியமர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் தீர்வு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்னைகளில், நல்ல தீர்வு ஏற்படும் வரை, இலங்கைக்கு வர இயலாது என, பிரதமர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment