Friday, November 11, 2011

கல்முனையில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆறு இந்தியர்கள் கைது!

Friday, November 11, 2011
கல்முனை நகரில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆறு இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இந்தியப் பிரஜைகள் சுற்றுலா விஸாவை பயன்படுத்தி நாட்டிற்கு வருகை தந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

அம்பாறை - மல்வத்த பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment