Saturday, November 19, 2011

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாளைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது!

Saturday, November 19, 2011
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாளைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

நாளை மாலை 6.30 அளவில் இந்த அறிக்கை அவரிடம் கையளிக்கப்படும் என ஆணைக்குழுவின் ஊடக பேச்சாளர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவின் அதிகாரங்கள் கடந்த 15ம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஜனாதிபதி செயலகமே தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

நிலையான சமாதனத்தை பாதுகாப்பது தொடர்பில், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் இந்த குழு ஆராய்ந்து, தமது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

No comments:

Post a Comment