Tuesday, November 1, 2011

(புலி)கூட்டமைப்பு அமெரிக்காவிற்குச் சென்று பேச்சு நடத்திவரும் சூழ்நிலையில்: பழிதீர்க்கும் வகையில்தான் செல்வா சிலை உடைக்கப்பட்டுள்ளது-ஈ.சரவணபவன்!

Tuesday, November 01, 2011
தமிழ் மக்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்ற தந்தை செல்வாவின் கூற்றை அவரின் சிலையை உடைத்ததன் மூலம் நிரூபித்து விட்டிருக்கின்றனர். நல்லிணக்கம், சகவாழ்வு பற்றி வாய்கிழியப் பேசும் அரசு இப்படித்தான் அவற்றைச் செய்யப்போகிறதா? (புலி)கூட்டமைப்பு அமெரிக்காவிற்குச் சென்று பேச்சு நடத்திவரும் சூழ்நிலையில் அதற்குப் பழிதீர்க்கும் வகையில்தான் செல்வா சிலை உடைக்கப்பட்டுள்ளது. என தமிழ்க் (புலி)கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வாவின் சிலை திருகோணமலையில் உடைக்கப்பட்டது குறித்து நேற்று அவர் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தைக் கேள்வியுற்றவுடன் நான் பெரும் அதிர்ச்சியுற்றேன்.

திருமலையில் தமிழரின் தனித்துவம் சூட்சுமமாக அழித்தொழிக்கப்பட்டுவரும் ஒரு நிலையில் இந்தச் சிலை உடைப்பு விடயத்தை ஒரு சிறிய விடயமாகக் கருதிவிடமுடியாது.

தந்தை செல்வா கூறியதுபோன்று தமிழர்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பது இந்தச் சிலை உடைப்பு மூலம் அச்சொட்டாக உறுதியாகியுள்ளது. தேசிய நல்லிணக்கம், சகவாழ்வு என்பன பற்றி சர்வதேசத்திடம் கூறுபவர்கள் இப்படித்தான் அதனை ஏற்படுத்தப் போகின்றனரா?

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் எமது எம்.பிக்கள் அமெரிக்காவுக்குச் சென்று தமிழரின் பிரச்சினைகளை சர்வதேசத்திடம் எடுத்துரைத்துவரும் நிலையில், இந்தச்சிலை உடைப்பானது அதற்குப் பழிவாங்கும் செயற்பாடுதானா என்று கேள்வியெழுப்ப விரும்புகின்றேன்.

இந்த விடயத்தை இலேசான விடயமாகத் தமிழர்கள் கருதவில்லை. சர்வதேச சமூகமும் இதனை அப்படிக் கருதக்கூடாது என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

இது தமிழருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம் என்பதால் இதை நாங்கள் சும்மா விட்டுவிடப்போவதில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment