Tuesday, November 01, 2011
சென்னை : அத்வானி யாத்திரை செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டை முன்னதாக கண்டுபிடித்து தகவல் கூறிய அதிமுக தொண்டர் செல்வராஜ் மற்றும் கவுன்சிலர் செல்வம் ஆகியோரை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா ரூ.50 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கினார். அதிமுக தலைமைக்கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி கடந்த 28ம் தேதி அன்று மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை மதுரையில் இருந்து மேற்கொண்டார். அவர் செல்ல இருந்த திருமங்கலம் & ராஜபாளையம் சாலையில் உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் கவண்டன் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப் பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது.
இதை அறிந்த மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியம், ஆலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் எம்.செல்வராஜ் என்பவர், ஆலம்பட்டி ஊராட்சி அதிமுக செயலாளரும், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு 14வது வார்டு கவுன்சிலருமான பெ.செல்வம் மூலம் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்று, அதை செயலிழக்கச் செய்தனர்.
ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு வார்டு கவுன்சிலர் செல்வம் ஆகியோரின் சமயோசித நடவடிக்கை காரணமாக மிகப்பெரிய பேராபத்து தவிர்க்கப்பட்டு, சதிச் செயல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன.
இவர்களின் துரித நடவடிக்கையை பாராட்டி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று செல்வராஜ் மற்றும் செல்வம் ஆகியோரை தமது இல்லத்துக்கு வரவழைத்து, அதிமுக சார்பில் ஸீ50 ஆயிரம் அன்பளிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment