Tuesday, November 01, 2011
நெல்லை : கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணிக்கு செல்ல பாதுகாப்பு கேட்டு நேற்று அணுமின்நிலைய தொழிற்சங்க ஊழியர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கூடங்குளம் அணுமின்நிலைய தொழிற்சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுசெயலாளர் வினோத்குமார், சஜூ ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் நேற்று நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாட்டின் மின்தேவையை கருத்தில் கொண்டு கூடங்குளத்தில் அணுமின்நிலைய பணிகள் நடந்து வருகின்றன. அணுமின் நிலையத்தில் 6 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும், ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும் பணியாற்றி வருகிறோம். இதில் தமிழகத்தை சேர்ந்த 600 பேர் பணியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி முதல் அங்கு நிலவும் சூழல் காரணமாக பணிக்கு யாரும் செல்ல முடியவில்லை.
கூடங்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மறியல் மற்றும் முற்றுகை போராட்டங்கள் காரணமாக அத்தியாவசிய பணிகளுக்கு குறைந்த பட்ச ஊழியர்கள் கூட செல்ல முடியவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அணுமின்நிலையத்தில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள செல்லும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி நேற்று 14ம் நாளாக இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தோமையார்புரத்தை சேர்ந்த மீனவர்களும், தில்லைவனம்தோப்பு பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment