Tuesday, November 1, 2011

பெங்களூர் கோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா மனு!.

Tuesday, November 01, 2011
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த மாதம் இந்தக் கோர்ட்டில் ஜெயலலிதா நேரில் ஆஜரானார். 2 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோர்ட்டில் கேட்கப்பட்ட 567 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். நவம்பர் 8ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராகுமாறு பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா இன்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி பெங்களூர் கோர்ட்டில் கடந்த 20 மற்றும் 21ம் தேதிகளில் நேரில் ஆஜரானேன். விசாரணை முடியவில்லை எனக்கூறி வரும் 8ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். முதல்வராக இருப்பதால் பணிச்சுமை அதிகமாக உள்ளது. நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment