Monday, November 14, 2011

புலிகளின் குரல் வானொலியில் கடமையாற்றிய நால்வர் கனடாவில் தஞ்சம்!

Monday, November 14, 2011
புலிகளின் குரல் வானொலியில் கடமையாற்றிய நால்வர் கனடாவில் தஞ்சம்!
பாரிய யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என இனங்காணப்பட்டுள்ள புலிகளின் முக்கியஸ்தர்கள் பதினென்மருக்கு எதிராகச் (18) இலங்கை அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இவர்கள் அனைவரும் சாதாரண மக்களுடன் படகுகள் மூலம் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கும் இலங்கை பாதுகாப்பு தரப்பு, இப்போது இவர்கள் அனைவரும் கனடா, அவுஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் புகலிடம் கோரியுள்ளனர் என்று குறிப்பிடுகிறது.

இவர்களில் நால்வர் கனடாவில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களைக் கனேடிய பொலிஸார் ஏலவே அடையாளம் கண்டுள்ளனர். இந்த நால்வரும் புலிகளின் குரல் வானொலியுடன் தொடர்புடையோர் என்றும் இலங்கை பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment