Sunday, November 06, 2011ஐதராபாத்: தெலுங்கானாவுக்கு ஆதரவாக பேச மறுத்ததால் நடிகை ஸ்ரேயாவின் கார் மீது தெலங்கானா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்லரி நரேஷுடன் தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. ஐதராபாத்தில் உள்ள விவசாயப் பல்கலைக் கழகத்தில் இதன் ஷூட்டிங் நேற்று நடந்தது. அப்போது அங்கு வந்த தெலங்கானா ஆதரவாளர்கள் சிலர், கேமராவைப் பார்த்து ஸ்ரேயா, ‘ஜெய் தெலங்கானா‘ என்று முழக்கம் இட வேண்டும் என மிரட்டினர். இதற்கு அவர் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ஸ்ரேயாவை கண்டபடி திட்டியவாறு விரட்டினர். இதனால் பரபரப்பான படக்குழுவினர் ஸ்ரேயாவை பத்திரமாக கேரவனுக்குள் அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவருடைய கார் மீது கற்களை வீசினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இது குறித்து ஸ்ரேயா, ‘‘போராட்டக்காரர்கள் என்னிடம் நடந்து கொண்டது எந்த விதத்தில் நியாயம்? ஜெய் தெலுங்கானா என்று கூறச் சொல்கிறார்கள். கற்களை வீசி தாக்குகிறார்கள். இந்த சம்பவங்களை போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சுதந்திர நாட்டில் இது தான் பாதுகாப்பா?‘‘ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment