Sunday, November 06, 2011இந்த ஆண்டில் இதுவரையில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் 7000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
பெற்றோர்களினால், பாதுகாவலர்களினால் அல்லது நன்கு தெரிந்தவர்களினால் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் n;தாடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியல் தொடர்புடைய சிலரும் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அரசியல் அழுத்தம் காரணமாக இவ்வாறான சம்பங்கள் அம்பலப்படுத்தப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம், இரண்டு பதினைந்து வயது சிறுமிகள் அவர்களது காதலர்களினால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட சட்டங்கள் இயற்றப்பட உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment