Sunday, November 06, 2011அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரசவ விடுதிக்குள் அனுமதியின்றி சந்தேகத்திற்கிடமான முறையில் நுழைவதற்கு முயற்சித்த ஒருவர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் அநுராதபுரம் மேலதிக நீதவான் சஜீவ குணரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தபட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் பெண்கள் விடுதிக்குள் நேற்று நள்ளிரவு பிரவேசிப்பதற்கு முயற்சித்த வேளையில் பாதுகாப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் பிடிக்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர் புதிதாக பிறந்த குழந்தைகளை கடத்துவதற்காக வந்திருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர் அநுராதபுரம் தம்மான்னாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment