Friday, November 25, 2011

அவுஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சம் கோரிய இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் விடுதலை!

Friday, November 25, 2011
அவுஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சம் கோரிய இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ளனர்.

அவர்களுக்கு பாதுகாப்பு வீசாக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் கிரிஸ் பிரவுன் இதனை அறிவித்துள்ளதாக, த சிட்னி மோர்னிங் எரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, படகுகளில் வரும் அகதிகளை விசேட அகதிகளாக கணக்கில் கொள்ளப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.

சாதாரண அகதி அந்தஸ்து கோருவோர் போன்று, படகுகளில் வரும் அகதிகளும் நீதிமன்றத்தின் ஊடாக அகதி அந்தஸத்துப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை ஒன்று பின்பற்றப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வருவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தற்போது, வானூர்தி மூலம் வருகின்ற அகதிகள் மாத்திரமே நீதிமன்றத்தின் ஊடாக அகதி அந்தஸ்த்து பெற அனுமதிக்கப்படுகின்றனர்.

படகுகளில் வருபவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுவதுடன், பல்வேறு விசேட சட்டத்திட்டங்களும் காணப்படுகின்றன.

இந்த நடைமுறையில் அடுத்த ஆண்டு முதல் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

No comments:

Post a Comment