Friday, November 25, 2011

கொழும்பில் தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் -குமாரகுருபரன்!

Friday, November 25, 2011
கொழும்பில் தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தலைநகர் கொழும்பில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் குமாரகுருபரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் காணப்படும் காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் மூன்று தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களேனும் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட முடியும் என தேசிய மொழிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்தமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சொந்த மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு தமிழர்களுக்கு உரிமை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் சிறுபான்மை மொழியான பெங்காலி மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment