Friday, November 25, 2011தொல்பொருள் காட்சியகங்களின் பாதுகாப்புகளுக்காக காவற்துறையினரை ஈடுபடுத்த, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பணித்துள்ளார்.
தேசிய உரிமைகளுக்கான அமைச்சின் செயலாளர், காந்தி விஜேதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சின் கோரிக்கைக்கு இணங்க, பாதுகாப்பு செயலாளர், காவற்துறை மா அதிபருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக தொல்பொருள் காட்சியகங்களின் பல்வேறு பொருட்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment