Friday, November 25, 2011

இலங்கை பிரதிநிதிகள் இந்தியாவில்!

Friday, November 25, 2011
இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு, நேற்றைய தினம் இந்திய பஞ்சாயத்து மற்றும் சமூக நலன் அமைச்சர் எம்.கே.முனீரை சந்தித்துள்ளது.

இந்த குழு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில், யுத்தத்தின் பின்னரான துரித அபிவிருத்திக்கான திட்டங்கள் குறித்து அங்கு ஆராய்ந்து வருகிறது.

இந்த குழுவில் திருகோணமலை நகரசபை தலைவர் மொஹமட் மஹரூப்
10 பேர் உள்ளடங்குகின்றனர்.

கேர்ளாவில் உள்ள பொது நிர்வாக கற்றைநிலையத்துக்கும் அவர்கள் விஜயம் மேற்கொண்டனர்.

அமைச்சர் மூனீருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது, மக்களின் அபிவிருத்தி திட்டங்கள், பெண்களை சக்திமயப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment