Friday, November 25, 2011புலிகளின் தமிழர் புனர்வாழ்வுக்கழக முக்கியஸ்தர்கள் ஐவருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளிநாடுகளிலிருந்து பெரும் தொகைப் பணத்தை பெற்றுக் கொண்டு அதனை புலிகளுக்கு வழங்கியுள்ளதாக அரசாங்கத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அது தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கிலேயே புலிகளின் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் முக்கியஸ்தர்கள் ஐவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி காந்திலிங்கம் பிரேம் ரெஜி, கதிரேசு கணேசலிங்கம், பாலசுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராசா, கோமலியன் பிரபாகரன், துரைராசா பிரியதர்சன் ஆகியோருக்கு எதிராகவே மேற்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு நிதிசேகரிக்க உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment