Wednesday, November 23, 2011

இத்தாலி மாஜி பிரதமர் மீதான செக்ஸ் புகார் : மாடல் அழகிகளிடம் தீவிர விசாரணை!

Wednesday, November 23, 2011
மிலன் : இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி மீதான செக்ஸ் வழக்கு விசாரணையில் மாடல் அழகிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இத்தாலி பிரதமராக 3 முறை இருந்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி (75). நிதி நெருக்கடி காரணமாக கடந்த 16-ம் தேதி பதவி விலகினார். மாபியா கும்பல்களுடன் தொடர்பு, லஞ்சம், ஊழல், வரி முறைகேடு என இவர் மீது பல புகார்கள் கூறப்பட்டன. மது பார்ட்டிகளுக்கு அழகிகளை வரவழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருப்பார் என்றும் புகார் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மைனர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் விபசார அழகிகளுக்கு ஆதாயம் செய்துகொடுப்பதற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்று கூறப்பட்ட புகார் அவருக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி பல கட்டங்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில், மிலன் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. கோடீஸ்வரர்களுக்காக பெர்லுஸ்கோனி நடத்திய செக்ஸ் பார்ட்டியில் பங்கேற்றவர்கள் என்று கூறப்பட்ட மாடல் அழகிகள், நடன அழகிகள் 32 பேர் ஆஜராயினர். தங்களை பாலியல் தொழிலாளர்களாக சித்தரித்ததற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அம்ப்ரா பட்டிலனா, சியரா டனஸ் என்ற டீன்ஏஜ் அழகிகள் கூறுகையில், ‘‘பெர்லுஸ்கோனி செக்ஸியான ஜோக்குகள் சொல்வார். நாங்கள் குறைந்தபட்ச ஆடையுடன் பங்கேற்பது அவருக்கு மிகவும் பிடிக்கும்’’ என்றனர். விருந்தினர்களை மகிழ்ச்சியூட்டவே அவர்களை வரவழைத்ததாக பெர்லுஸ்கோனியின் உதவியாளர் தெரிவித்தார். வழக்கு விசாரணை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. செக்சுக்காக மைனர் பெண்ணுக்கு பெர்லுஸ்கோனி சார்பில் பணம் தரப்பட்டதா? பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதாயம் செய்வதற்காக அதிகார துஷ்பிரயோகம் நடந்ததா? கைதான அழகி ஒருவரை விடுவிக்க போலீசுக்கு பெர்லுஸ்கோனி நிர்ப்பந்தம் கொடுத்தாரா? ஆகியவை தொடர்பான வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது.

No comments:

Post a Comment