Wednesday, November 23, 2011

சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயலலிதாவிடம் விசாரணை முடிந்தது!

Wednesday, November 23, 2011
பெங்களூர் : பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நடைப்பெற்ற விசாரணை முடிவுக்கு வந்து உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 2 .30 மணிக்கு தான் முடிவடைந்தது. மொத்தம் 1339 கேள்விகள் அதில் நேற்று 1147 கேள்விகள் கேட்கப்பட்டன.

இன்று 192 கேள்விகள் இடைவெளி இன்றி ஜெயலலிதாவிடம் தொடர்ந்து கேட்கப்பட்டன. இப்போது விசாரணை முடிவுற்றது. விசாரணையை முடித்துக்கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை புறப்பட்டு சென்று கொண்டு இருக்கிறார்.

No comments:

Post a Comment