Wednesday, November 23, 2011யாழ். நகரப் பகுதியில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என சந்தேகிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் காதலர்களாம் எனப் பதிவுத் திருமணம் செய்து வைத்தனர் கூட்டமைப்பினர்.
விபச்சார வழக்கு ஒன்றில் பிடிபட்ட 8 பேரில் இருவர் காதலர்கள் எனவும் அவர்களைப் பிணையில் விடுதலை செய்யுமாறும் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா மற்றும் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான மு.றெமிடியஸ் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட நீதிமன்றில் வாதிட்டனர்.
குறித்த இருவரும் நீண்டகால காதலர்கள் எனவும் பதிவுத் திருமணம் செய்வதற்கு விருப்புகின்றார்கள் எனவும் அவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறும் மன்றில் மனு சமர்பித்து வாதிட்டனர்.
இவ்விருவரின் வாதாட்டத்திறமையில் உண்மைநிலை இருப்பதை அறிந்த நீதிவான் இருவரையும் பதிவுத் திருமணம் செய்து நீதிமன்றிற்கு திருமண அத்தாட்சிக் கடிதத்தை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டு ஆள் பிணையில் இருவரையும் விடுதலை செய்தார்.
No comments:
Post a Comment