Wednesday, November 23, 2011

பாராளுமன்றத்திற்குள் எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்தும் கலாசாரத்தை ஐக்கிய தேசிய கட்சியே ஆரம்பித்து வைத்தது-மைத்திரிபால சிறிசேன!

Wednesday, November 23, 2011
பாராளுமன்றத்திற்குள் எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்தும் கலாசாரத்தை ஒரு காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியே ஆரம்பித்து வைத்தது. 1977 மற்றும் 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியினர் அப்போதைய எதிர்க்கட்சி எம். பி. க்களாகிய எம்மீது சபையில் தாக்குதல் நடத்தி சித்திரவைதை செய்தனர். இம்முறை வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்தபோது அதனை தடுக்கும் முகமாகவே எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடகம் அரங்கேற்றப்பட்டது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க சைகை காட்டிய பின்னரே எதிர்க்கட்சி எம்.பி. க்கள் அன்றைய தினம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதுடன் சுவரொட்டிகளையும் ஏந்தினர். சபை கலரியில் வெளிநாட்டு தூதுவர்ககள் இருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி இதனை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment