Saturday, November 26, 2011

இனியும் பயங்கரவாத செயல்களை பாகிஸ்தான் ஊக்குவிக்கக் கூடாது-கிருஷ்ணா:-மும்பை தாக்குதல்-மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!

Saturday, November 26, 2011
மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இனியும் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை பாகிஸ்தான் ஊக்குவிக்கக் கூடாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து பொதுமக்கள் மீது பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்றினர். தனித்தனி குழுவாக சென்ற தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகள் பலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்ததால், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே 2 நாட்கள் கடும் சண்டை நடந்தது. முடிவில் 10 பயங்கரவாதிகளில் ஒருவரை தவிர, 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குததலில் வெளிநாட்டினர், பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள் உள்பட 166 பேரை பலியாகினர்.

மும்பையில் தாக்குதல் நடத்தியதன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, பாகிஸ்தான் இனியும் இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. இத்தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என்றார்.....

மும்பை தாக்குதல் : மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!

மும்பை : மும்பை தாக்குதலின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மும்பை நகரம் முழுவதும் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நகரின் முக்கிய இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த 2008ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். மும்பை தாக்குதல் வழக்கில் இந்தியா மட்டும் இல்லாமல் உலகையே அதிர்ச்சி அடைய செய்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் உடன் பிடிப்பட்ட ஒரே குற்றவாளி பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு மும்பை ஐகோர்ட்டும் மரண தண்டனையை உறுதி செய்தது.

பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக சென்று, 2008, நவ., 26ம் தேதி மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர். பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2 நாட்கள் கடும் சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் பலரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்ததால், அவர்களை உயிருடன் மீட்க நமது வீரர்கள் போராட வேண்டியிருந்து.

முடிவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குததலில் வெளிநாட்டினர், பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள் உள்பட 166 பேர் பலியாகினர். இதற்கு நமது பாதுகாப்பு துறையில் முன்னேற்றம் இல்லாதது மற்றும் குற்றவாளிகள் மீது ஆட்சியாளர்கள் துணிச்சலான நடவடிக்கை மேற்கொள்ளாதது ஆகிய இரண்டும் தான் முக்கிய காரணம்.

No comments:

Post a Comment