Saturday, November 26, 2011காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் விறகு வெட்டுவதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர் மிதிவெடியில் சிக்கி தனது காலை இழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் கோணப்புலம் மல்லாகத்தைச் சேர்ந்த பிள்ளையார்குட்டி சிவானந்தன் என்ற இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்து காலை இழந்துள்ளார்.
கைவிடப்பட்டுள்ள பிரதேசங்களில் காணப்படும் மரங்களை விறகிற்காக வெட்டிவரும் இவர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் காணப்படும் கைவிடப்பட்ட காணி ஒன்றில் உள்ள இரும்புக் கம்பிகள் மற்றும் கேடர்கள் என்பவற்றை எடுக்கச் சென்றுள்ளார்.
இதன்போது இந்தப் பகுதியில் புதைக்கபட்டிருந்த மிதிவெடியில் சிக்கி தனது காலை இழந்துள்ளார்.
காயமடைந்துள்ள இந்த இளைஞர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிகச் சிகிச்சைகளுக்காக தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment