Saturday, November 26, 2011

அவுஸ்திரேலிய அகதிகள் கட்டம் கட்டமாக விடுதலை!

Saturday, November 26, 2011
அவுஸ்திரேலிய அரசாங்கம் மாதாந்தம் 100 அகதிகளை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளது.

நெரிசல் மிகுந்த அகதி முகாம்களில் இருந்து அவர்கள் விடுதலை செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே நேற்றைய தினம் 27 அகதிகள் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்டவர்கள், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அவர்களுக்கு தற்காலிக வீசாக்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, தொடச்சியாக 100 அகதிகளுக்கு பாதுகாப்பு வீசாக்கள் வழங்கி, மாதாமாதம் விடுவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவுஸ்திரேலிய அகதி முகாம்களில் 3 ஆயிரத்து 800 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment