Wednesday, November 09, 2011இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்கள் அடிப்படையற்றவை என கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததுடன் பல படகுகள் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த வாரத்தில் இரண்டு தடவைகள் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச் குற்றசாட்டுக்களில் எவ்வித அடிப்படையும் கிடையாது, இந்திய ஊடகங்களில் வெளியான இந்தத் தகவல்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவு கடற்பரப்பில் மீனவர்கள் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment