Wednesday, November 09, 2011புலிகளுக்குச் சொந்தமான 7 கப்பல்கள் தென்கிழக்காசிய கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது. எனினும் அக்கப்பல்கள் தொடர்பான இரகசியங்களை வெளியிட முடியாதென அரசாங்கத்தின் பிரதான கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு கப்பல் மட்டுமே இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். புலிகளுக்குச் சொந்தமான கப்பல்கள் குறித்து ஐ.தே.கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
No comments:
Post a Comment