Wednesday, November 9, 2011

வடக்கு கிழக்கில் காணிப்பதிவுகள் தொடர்பான சுற்றுநிருபத்திற்கு இடைக்காலத் தடையுத்தரவு!

Wednesday, November 09, 2011
வடக்கு கிழக்கில் காணிப்பதிவுகள் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய அதனை அமுல்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

வடக்கு கிழக்கு உட்பட நாடுதழுவிய ரீதியில் காணிப்பதிவுகள் மேற்கொள்ளப்படுவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது. இதன்போது வடக்கு கிழக்கில் காணிப்பதிவுகள் மேற்கொள்ளப்படக்கூடாது எனவும், இதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கவேண்டும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடையுத்தரவை வழைங்கியுள்ளது.

No comments:

Post a Comment