Wednesday, November 9, 2011

நிறுவன சுவீகரிப்பு சட்டமூலம் 76 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Wednesday, November 09, 2011
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வினைத் திறனாக செயற்படாத நிறுவனங்களை தேசிய மயப்படுத்தும் சட்டம் 76 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல் தெரிவிக்கின்றன.

சற்று முன்னர் பாராளுமன்றில் இது தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது.

ஆளும் கட்சியின் சார்பில் 122 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதுடன் எதிராக 46 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்திருந்தன.

இந்த சட்ட மூலத்தின் ஊடாக 37 நிறுவனங்களை அரசாங்கம் தேசிய மயப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்ட மூலம் அரசியல் சாசனத்திற்கு முரணானது எனத் தெரிவித்து உச்ச நீதிமன்றில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment