Monday, November 07, 2011
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வழங்க சில நாடுகள் முயற்சி செய்கின்றன.
சில கூட்டமைப்பு உறுப்பினர்கள் புலிக் கொடி ஏற்றப்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு அவர்களுக்கு நிதி திரட்டவும் உதவி செய்துள்ளனர்.
புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஒர் அரசியல் கட்சியை ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் சந்திப்பு ஏற்றுக்கொள்ள முடியாது, அது உறுப்பு நாடான இலங்கைக்கு இழைக்கும் அநீதியாகவே கருதப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக கருதப்பட முடியாது.
கூட்டமைப்பினரின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட கட்சிகளும் அரசியல் நீரோட்டத்தில் இயங்கி வருகின்றன. முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இயங்கி வருகின்றன.
எனவே, இந்த சகல தரப்பினரும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தை சந்திக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என தினமின பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலம்பொருந்திய நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றி வருகின்றன.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதனை தடுப்பதற்கு சில நாடுகள் கடும் முயற்சி மேற்கொண்டன. எனினும், ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக அந்த முயற்சிகளை முறியடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment