Monday, November 07, 2011
குடியேற்றவாசிகளாக தங்கியுள்ள 44 இலங்கையர்களை விரைவில் நாட்டிற்கு அனுப்பிவைக்க சுவிஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குடியேற்றவாசிளாக ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் சுவிட்ஸர்லாந்தில் தங்கியிருப்பதாகவும் அவர்களை விரைவில் திரும்பியனுப்புவதற்கு அந்நாட்டு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் சுவிட்ஸர்லாந்துக்கான இலங்கை தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே குறிப்பிட்டார்.
குடியேற்றவாசிகளாக தமது நாட்டில் தங்கியுள்ளவர்களை மீண்டும் தாயகத்திற்கு திருப்பி அனுப்புவதற்கான சூழ்நிலை நிலவுகின்றதா என சுவிட்ஸர்லாந்து அதிகாரிகள் தம்மிடம் வினவியதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையெனவும், மக்கள் சுமூகமான முறையில் வாழ்வதற்கான சூழல் காணப்படுவதாகவும் அவர்களுக்கு பதிலளித்தாகவும் சட்டத்தரணி சரத் கோன்கஹகே கூறினார்.
இது தொடர்பில் விடயங்களை ஆராய்ந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இந்தத் தீர்மானத்தினை எடுத்ததாகவும் அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை இலங்கைக் குடியேற்றவாசிகளை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் எவ்வித தடங்களும் இல்லையென சுவிட்ஸர்லாந்தின் பெடரல் நிர்வாக நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
குடியேற்றவாசிகளால் அரசியல் புகலிடம் வழங்குமாறு முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டினை நிராகரித்த போதே சுவிட்ஸர்லாந்து நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்தது.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தற்போது மிகவும் பாதுகாப்பான சூழல் நிலவுவதாகவும் இந்த உத்தரவினை பிறப்பித்த சுவிட்ஸர்லாந்து நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையின் தமிழ்க் குடியேற்றவாசிகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான வாய்ப்பு நிலவுவதாக சுவிட்ஸர்லாந்து செனட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:
Post a Comment