Monday, November 7, 2011

இந்தியா 'நட்பு நாடு' தான் : பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்!

Monday, November 07, 2011
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு 'மிகவும் ஆதரவான (நட்பு) நாடு' என்ற அந்தஸ்தை வழங்குவதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தியாவுக்கு 'ஆதரவான நாடு' என்ற அந்தஸ்து வழங்குவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ.12,250 கோடியாக உள்ள இரு தரப்பு வர்த்தகம் ரூ.24,500 கோடியாக அதிகரிக்கும்Õ என்றும் பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிர்டஸ் ஆஷிக் அவான் செய்தியாளர்களிடம் கடந்த புதனன்று தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், 'இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக 'ஆதரவான நாடு' என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பான பேச்சு தொடங்க வேண்டும் என கூறியுள்ளேன். ஆதரவான நாடு அந்தஸ்து வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்ÕÕ என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியதாக தகவல் வெளியானது.

இது குறித்து பாகிஸ் தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியதாவது: இந்தியாவுக்கு Ôநட்பு நாடுÕ அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை. இது தொடர்பாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் முயன்று வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சு நடைபெற்று வருகிறது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து, இருதரப்பு வர்த்தக செயலாளர்களும் இம்மாத இறுதியில் சந்தித்து பேச உள்ளனர். இவ்வாறு ஹினா ரப்பானி கர் தெரிவித்தார்.

* இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ராணுவமும் பங்கேற்கும்.
* இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்த எல்லா தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
* உலகில் பாகிஸ்தான் ஒரு வளர்ந்த மற்றும் பொறுப்பான நாடு என்பதால் தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சேர அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.

No comments:

Post a Comment