Monday, November 7, 2011

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கும் - தினேஷ் குணவர்த்தன!

Monday, November 07, 2011
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை தயாரிக்கும் நோக்கில் அமைக்கப்படவுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கும் என அரசாங்கம் நம்புகின்றது. அந்த நம்பிக்கை யிலேயே அரசாங்கம் பாராளுமன்றத் தெவுக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என நம்புகின்றோம். மக்களின் நலன்கருதி முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை தயாரிக்கும் நோக்கில் அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனம் தாமதமடைந்துவருகின்றமை குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வை தயாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனம் விரைவில் இடம்பெறும். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் உள்ளடக்கப் பட்டுள்ள புதிய பிரேரணை விரைவில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும்.

பின்னர் இது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்பட்டு சபாநாயகரினால் தெரிவுக்குழு நியமிக்கப்படும்.ஆனால் இந்த செயற்பாட்டுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கவேண்டியது அவசியமாகும்.

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற தெவுக்கு ழு விடயம் கலந்துரையாடப்படும்போது எதிர்க்கட்சிகள் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.அதாவது தெரிவுக்குழு விடயத்துக்கு ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இதுவரை தெரிவுக்குழுவை எதிர்ப்பதாக உறுதியாக தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆதரவு இன்றியும் தெரிவுக்குழு வை அரசாங்கத்தினால் நியமிக்கலாம். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

எது எவ்வாறு இருப்பினும் மக்களின் நலன்கருதியே அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. எனவே முக்கியமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது தமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு இந்த தெரிவுக்குழு செயற் பாட்டுக்கு ஆதரவு அளிக்கும் என எதிர் பார்க்கின்றோம். இந்த செயற்பாட்டுக்கு ஆதரவு வழங்கவேண்டியது கூட்டமைப்பின் கடமை என்றே கருதுகின்ளூறாம்.

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது வெளிநாடுகளுக்கு சுற்று லாப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, லண்டன் என கூட்ட மைப்பினர் சுற்றுலாப்பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் சுற்றுலாப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர் பில் தீர்மானம் ஒன்றை எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment