Monday, November 07, 2011
சென்னை : அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சீமான் சென்னை திரும்பினார். ஆனால், அவரது சூட்கேஸ் மட்டும் மாயமானது.
உலக தமிழர் பேரமைப்பு மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொள்ள நாம் தமிழர் கட்சி தலைவரும் சினிமா இயக்குனருமான சீமான், கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றார். நியூயார்க் விமான நிலையத்தில் அவரை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர் வந்த அரபு எமிரேட்ஸ் விமானத்திலேயே அவரை திருப்பி அனுப்பினர்.
நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு சீமான் வந்தார். குடியுரிமை சோதனை முடித்து உடைமைகளைப் பெற காத்திருந்தார். ஆனால் அவரது சூட்கேஸ் வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, விமான நிலைய மேலாளரிடம் சீமான் புகார் கொடுத்தார். அதிகாரிகள் விசாரிக்கின்றனர். விமான நிலையத்துக்கு வெளியே வந்த சீமானை ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
நிருபர்களிடம் சீமான் கூறுகையில், அமெரிக்காவில் தமிழர்கள் நடத்திய விழாவில் நான் கலந்து கொள்ளாமல் இருக்க மத்திய அரசு சதி செய்து விட்டது. முறைப்படி விசா பெற்றிருந்தும் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி மக்களிடம் அப்துல் கலாம் பேச உள்ளார். அவர் தலைசிறந்த விஞ்ஞானி. அதனால் அணுமின் நிலையத்துக்கு ஆதரவாகத்தான் பேசுவார் என்றார்.

No comments:
Post a Comment