Monday, November 07, 2011
பாலியல் செயற்பாட்டைத் தூண்டும் மருந்து வகைகளை உட் கொள்ளுவதில் அவதானம் அவசியமென சுகாதார அமைச்சு குறிப்பிடுகிறது. பாலியல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டு பல்வேறு பெயர்களில் மாத்திரைகள் மற்றும் அவற்றுடன் தொடர்பான மருந்துகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் வாசனைத் திரவியம் மற்றும் ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சுட்டிக் காட்டியுள்ளது.
இவ்வாறான 50க்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் 6வகையான மருந்துப் பொருட்களே அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒளடத ஒழுங்கு அதிகார சபை சுட்டிக்காட்டுகிறது.
வைத்தியர்களின் ஆலோசனையின்றி உட்கொள்ளும் ஒரு சில பாலியல் செயற்பாட்டைத் தூண்டும் மருந்துகளால் மனச் சோர்வு, வாந்தி, குருதி அக்கம், மாரடைப்பு, நரம்புக்கோளாறுகள், வலி குணங்குறிகள், நிறைகுறைவு, வயிற்றுவலி போன்ற பக்க விளை வுகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சு இலங்கை மருந்து களை உட்கொள்ளு முன் வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment