Tuesday, November 22, 2011

இந்தியா வரைபடத்தில் இடம்பெற வேண்டிய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானில் சேர்ப்பு!

Tuesday, November 22, 2011
புதுடெல்லி : அமெரிக்க அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ள இந்திய வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக் கிரமிப்பு காஷ்மீரை (பி.ஓ.கே.) பாகிஸ்தானுடன் சேர்த்துள்ளனர். இதனால், அமெரிக்காவுடனான இந்திய உறவில் பாதிப்பு ஏற்படலாம் என தெரிகிறது. அமெரிக்க அரசில் ‘டிபாட்மென்ட் ஆப் ஸ்டேட்’ என்ற துறையின் இணையதளத்தில் ( ஷ்ஷ்ஷ்.stணீtமீ.ரீஷீஸ்) நாடுகள் பற்றிய பிரிவில் உலக நாடுகளை பற்றிய குறிப்புகள் மற்றும் வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியாவின் வரைபடத்தில் இடம் பெற வேண்டிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை, பாகிஸ்தானில் சேர்த்து வெளியிட்டுள்ளனர்.

அதே சமயம், வடக்கு காஷ்மீரில் சீனா எல்லையை ஒட்டியுள்ள அக்சாய் சின் பகுதியை ‘இந்தியா கோரும் பகுதி’ என அம்பு குறியிட்டு தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த பகுதி தற்போது சீனாவின் பிடியில் இருந் தாலும், அது இந்தியாவுக்கு சொந்தம் என கோரி வருகிறோம். இதை வரைபடத்தில் சரியாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க அரசு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மட்டும் பாகிஸ்தானில் சேர்த்திருக்கிறது.

இது எதேச்சையாக நடந்த தவறாக நிச்சயம் இருக்க முடியாது, பாகிஸ்தானை திருப்திப்படுத்துவதற்காக வேண்டுமென்றே அமெரிக்க அரசு செய்திருக்கலாம்’ என்று நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர். இந்த விவகாரத்தால், அமெரிக்காவுடனான இந்திய உறவு பாதிக்கப்படலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே, சீனா வெளியிட்ட வரைபடங்களில் அருணாசல பிரதேசத்தை சீனாவின் பகுதியாக சேர்த்திருந்தது. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சரி செய்ய நடவடிக்கை

சர்ச்சைக்குரிய வரைபடம் குறித்து டெல்லியில் இந்திய வெளியுறவு துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் கூறுகையில், ‘இது தொடர்பாக அமெரிக்க அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று வரைபடம் சரி செய்யப்படும். பல நாடுகள் மற்றும் அமைப்புகள் இது போல் இந்திய எல்லைகளை தவறாக குறிப்பிட்டிருக்கின்றன. அவற்றுடன் நாங்கள் பலமுறை பேசி சரி செய்திருக்கிறோம்’ என்றார்.

No comments:

Post a Comment