
Tuesday, November 22, 2011பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உரையாற்றியபோது, ஐ. தே. க. யினர் வெளிநடப்பு செய்த போதும் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களும் ஜனநாயக ஐக்கிய முன்னணி (ஜே.வி.பி.) உறுப்பினர்கள் சபையில் அமர்ந்திருந்தனர்.
ஐ. தே. க. உறுப்பினர்களின் ஆசனங்கள் வெறுமனே காணப்பட்டன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரும் வரவு-செலவுத் திட்ட உரையை மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டி ருந்தனர். வரவு-செலவுத் திட்ட உரை நிறை வுற்ற பின்னரும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விருந்துபசாரத் திலும் ஐ.தே.க.வினர் கலந்துகொள்ளவில்லை.
No comments:
Post a Comment