Monday, November 28, 2011புலிகள் தான் தமிழர்கள், தமிழர்கள் தான் புலிகள்” என்ற வீர வாக்கியம் பேசி இல்லாது ஒழிந்த நாசகார புலிகள்!
தன்னகத்தே கொண்டிருந்த இயற்கை வளங்கள் மற்றும் இயற்கை அழகு காரணமாக வெளிநாட்டவர்களால் பலரால் கவரப்பட்டு ஆட்சிக்குட்பட்டுத்தப்பட்ட அழகிய தீவே இலங்கையாகும். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் என வரிசையாக ஆட்சி செய்யப்பட்டு பின்னர் 1948 இல் சுகந்தரத்தைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து மக்கள் ஆட்சியாக மாறிய இலங்கையில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் அமைதியாவும் வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறு அமைதியும் ஒற்றுமையும் நிலவிய இலங்கை மண்ணில், 1980 காலப்பகுதியில் தோண்றிய சில நாசகார சக்திகள் செயற்பாடுகள் காரணமாக சமூகங்களுக்கிடையே நிலவிய ஒற்றுமையும் அமைதியும் சீர்குழையும் நிலை ஏற்பட்டது.
இத் தீய சக்திகள் தமது சுயலாபத்தில் ஈட்டிக் கொள்ளும் நோக்கிலும், அனைவரையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவரும் நோக்கிலும் மக்களிடையே கிளர்ச்சிகளை உண்டுபண்ணின.

இக் கிளர்ச்சி காரணமாக, 1980 முதல் 1990 வரையிலான காலப்பகுதிகளில் சமூகங்களுக்கிடையே பல இயங்கங்களும், அமைப்புக்களும் உருவாகின. இவ் இயக்கங்கள் தமக்கென தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்தப்படி தமக்கிடையே போட்டியிட்ட வண்ணம் ஒருவரை யொருவர் அழித்துக்கொண்டனர்.

தாமாகவே தோண்றிய இவ் இயக்கங்கள், தமக்கிடையே போட்டியிட்டு மக்களது நிம்மதியை கெடுத்தனர். பின்னர் எவ்வித பயனும் காணாதநிலையில் 1990 களில் தாமாகவே இல்லாது ஒழிந்தனர்.
இவ்வாறு தோண்றிய இயக்கங்களில் ஒன்றே புலியினர். இவர்கள் 1990 முதல் 2009 வரை நிலைப்பெற்றிருந்து கடந்த 2009 மே இல் முற்றாக இல்லாது ஒழிந்தனர்.
இவர்களும் தமக்கென ஒரு கோரிக்கையை வைத்தப்படி, 30 வருட காலமாக மக்களது நிம்மதியை கெடுத்தனர். முக்கியமாக தமிழ் மக்களது நிம்மதியையே முற்றாக கெடுத்தனர். தமது இயக்கத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு என்ற வகையில் தமிழ் இளைஞர் யுவதிகளை அவர்களது விருப்பத்திற்கு மாறாக இணைத்து, அவர்களது வாழ்வை கேள்விக்குரியாக்கினர். இச்செயற்பாட்டின் காரணமாக பலர் தமது உயிரை இளம் வயதிலேயே இழந்தனர். அதுமட்டுமின்றி எத்தனையே இளம் சிறார்கள், குதூகலத்துடன் விளையாட்டித் திரியவேண்டிய வயதில், துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு, சயனைட் குப்பிகளை கழுத்தில் தொங்கவிட்டப்படி போர் களத்தில் சென்று தமது உயிரை மாண்டுள்ளனர்.
புலிகளால் அமைப்பில் இணைக்கப்பட்ட சிறுவர் போராளிகள்

இலங்கையின் எத்தனையோ அறிஞர்களையும், மதத்தலைவர்களையும், அமைச்சர்களையும், பாரளுமன்ற உறுப்பினர்கள் என பலரை கொலை செய்த இவர்கள், பிற நாடுகளை சேர்ந்த பெரியார்களையும் கொலை செய்ய தவறவில்லை. உதாரணத்திற்கு இந்திய பிரதமரான ரஜீவ் காந்தியின் கொலையை குறிப்பிடலாம்.
இவ் இயக்கம் எவ்வித ஈவிரக்கமின்றி, சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் பெரியார்கள் என அனைத்து தரப்பினரையும் கொலை செய்தன் காரணமாக அனைத்துலக நாடுகளாலும் “தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு” என்ற பெயரை தமதாக்கிக் கொண்டனர்.
புலிகள் தான் தமிழர்கள், தமிழர்கள் தான் புலிகள்” என்ற வீர வாக்கியம் பேசிய இவர்கள், முற்று முழுதாக தமிழ் மக்களது நிம்மதியை கெடுத்ததே தவிர தமிழ் மக்களுக்கென எவ்வித நற்கருமங்களையும் புரியவில்லை. ஏன் அம் மக்கள் உண்ணுவதற்கு கூட உணவு வழங்கவில்லை. பல புலம்பெயர்நாடுகளில் ஏராளுமான நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவற்றில் எதையும் தமிழ் மக்களது நலன்புரி சேவைகளுக்கு பயன்படுத்தவில்லை. நாம் அறிவோம் இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, பொதுமக்களுக்கென அரசாங்காத்தால் அனுப்பிவைக்கப்பட்ட ஏராளமான உணவுப்பொருட்களையும் கூட தமது தேவைக்கென பதுக்கிவைத்து, பின்னர் அவற்றை குண்டு வைத்து
தகர்த்தனர். இச் செயற்பாட்டை பலர் நேரடியாக கண்டுள்ளனர். அவ் வேளையில் மக்கள் உணவுக்கென பெரும் போராடினர். அவ்வேளையிலும் கூட இவர்கள் அதை விநியோகிக் மறுத்துள்ளனர். தமிழ் மக்களுக்கென போராடுகிறோம் எனக் கூறிக் கொண்ட இவர்கள் ஏன் அம் மக்களுக்கு உண்ணுவதற்கு கூட உணவு வழங்கவில்லை. ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான உணவை வழங்காமல், தமது இயக்கத்தின் தேவைக்காக பதுக்கி வைத்த இவ் இயக்கத்தை நாம் எவ்வாறு தமிழ் மக்களுக்காக போராடிய இயக்கம் என கூற முடியும், இவர்கள் உண்மையிலேயே சுயலாபம் கருதியே போராடியுள்ளனர். இவ்வாறு இவர்கள் பொதுமக்களுக்கு இழைத்த பல கொடுமைகளை, சாட்சியுடன் கூறமுடியும்.இலங்கை இராணுவமானது, தனியனே சிங்களவர்களையே அல்லது தமிழர்களையே அல்லது முஸ்லிம்களையே அல்லது கிறிஸ்தவர்களையே மாத்திரம் கொண்ட அமைப்பு அல்ல, மாறாக அனைத்து இனத்தை சேர்ந்த மக்களையும் உறுப்பினர்களாக கொண்ட ஒரு தொழில்ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட, அனைத்து வசதிகளையும் கொண்ட பாதுகாப்பு படையாகும்.
பொதுமக்களுக்கு உதவும் இராணுவத்தினர்
இவ் இராணுவப்படை நாட்டு மக்களி்ன் பாதுகாப்புக்கென போராடி 2009 மே இல் பயங்கராத்தில் இருந்து நாட்டை மீட்டது. இப்போது எவ்வித பாகுபாடுமின்றி முக்கியமாக தமிழ் மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும்நோக்கில் வட பகுதியில் பல மக்கள் நலன்புரிசேவைகளை மேற்கொண்டுவருகின்றனர். புலிகளால் புதைக்கப்பட்டுள்ள மிதவெடிகளை துரித கதியில் அகற்றி மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுதல், விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளையும் உபகரணங்களையும் வழங்குதல், இலவச மருத்துவ முகாங்களை நடத்துதல், வீதி அபிவிருத்தி, கட்டிடங்களின் மீள்நிர்மானங்கள் போன்ற பல நலன்புரிசேவைகளை புரிந்துவருகின்றனர்.
மக்கள் நலன்புரி சேவையில் ஈடுபடும் இராணுவத்தினர்
நாம் அறிவோம், யாழ்பாணம் பல அறிஞர்களை உருவாக்கிய ஒரு மாவட்டமாகும். பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அனைத்து இம் மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் முற்று முழுதாக பாதிக்கப்பட்டது. எனவே இம் மாணவர்களது கல்வி நடவடிக்கைகளை மீண்டும் புத்துயிர்ப்படுத்துவதற்காக, இராணுவத்தினர் பல செயல்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment