இலங்கையில் புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த தரைப்படை, கடற்படை விமானப்படை மற்றும் பொலீஸ் வீரர்களின் குடும்த்தினர்க்கு-உத்தம பூஜா பிரநாம பதக்கம் வழங்கும் வைபவம்!


Monday, November 28, 2011புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த தரைப்படை , கடற் படை விமானப்படை மற்றும் பொலீஸ் வீரர்களின் குடும்த்தினர், இன்று (நவ 28) தங்கல்ல விமானப்படைத் தளத்தில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் செயளாலர் திரு கோடாபய ராஜபக்க்ஷ அவர்களால் “உத்தம பூஜா பிரநாம” பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
திரு. ராஜபக்க்ஷ அவர்கள் உரையாற்றுகையில் நாட்டிற்காக உயிரைத்தியாகம் செய்த படைவீரர்களுக்காக அரசாங்கத்தினால் பல நலன்புரித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும். உலகிலேயே மிகக் கொடூரமான பயங்கரவாதிகளை நாட்டில் இருந்து முற்றாக அகற்றிய பெருமை, படைவீர்ர்க ளையே சாரும் எனவும் தெரிவித்தார்.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது முதல் மொத்தமாக 30000 அதிகமான படை வீரர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக தமது உயிர்களைத் தியாகம் செய்ததாகவும், இவர்களை கௌரவிக்கும் வகையிலே இவ்வாறு பதக்கமளிக்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதற்கமைய இந் நிகழ்வில் 687 படைவீர்ர்களின் குடும்பத்தினர் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர்களுள் 549 தரைப்படை வீரர்களின் குடும்பத்தினரும், 45 கடற் படை வீரர்களின் குடும்பத்தினரும், 11 விமானப்படை வீரர்களின் குடும்பத்தினரும் மற்றும் 82 பொலீஸ் வீரர்களின் குடும்பத்தினரும் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் ரனவிரு சேவா சங்கத்தின் தலைவி திருமதி.பத்மா வத்தாவ, ரனவிரு சேவை அதிகாரத்தின் திட்டப் பணிப்பாளர் திரு. ருபேரு தந்திரிகே, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. எஸ் ஹெட்டியாரச்சி, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாலித பெனான்டோ ஆகியோர் கலந்துக்கொண்டனர்
No comments:
Post a Comment