Thursday, November 24, 2011

விஜயகாந்த் உண்ணாவிரதம் : பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து!

Thursday, November 24, 2011
அண்ணாநகர் : பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஸ் கட்டணம் மற்றும் பால் விலையை முதல்வர் ஜெயலலிதா உயர்த்தி அறிவித்தார். இதை கண்டித்து தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இதற்காக பெரிய அளவில் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. கட்சி தலைவர் விஜயகாந்த், 8.15 மணிக்கு அங்கு வந்தார். உண்ணாவிரதத்துக்கு அவர் தலைமை வகித்தார். அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் எம்எல்ஏ, இளைஞரணி செயலாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, நல்லதம்பி எம்எல்ஏ, உயர்மட்ட குழு உறுப்பினர் ஷெரீப், பிரேமலதா விஜயகாந்த், மாவட்ட செயலாளர்கள் செந்தாமரைக்கண்ணன், வி.என்.ராஜன், யுவராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட சுமார் 500க்கும் அதிகமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கட்சி அலுவலகத்துக்கு வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பெண்கள் சிலர், விஜயகாந்தை சந்தித்து, ‘பஸ் கட்டணம் எக்கச்சக்கமாக உயர்ந்து விட்டது. இதனால் சிரமமாக உள்ளதுÕ என்றனர். ‘அதற்காகத்தானே உண்ணாவிரதம் இருக்கிறேன் என அவர்களிடம் விஜயகாந்த் கூறினார்.

மாட்டு வண்டியில் வந்த கட்சியினர்

விருகம்பாக்கத்தை சேர்ந்த தேமுதிக தொண்டர்கள் 30 பேர், 3 மாட்டு வண்டிகளில் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘பஸ்சில் வர எங்களுக்கு வசதி இல்லை, அதனால் மாட்டு வண்டியில் வந்துள்ளோம். இனிமேல் மக்கள் எல்லோரும் மாட்டு வண்டியில்தான் செல்ல வேண்டும். பணக்காரர்களுக்குதான் பஸ். அனைவருக்கும் பெஸ்ட் மாட்டு வண்டிதான் என்று கூறி, மாட்டு வண்டிகளை ஓரமாக நிறுத்தி விட்டு உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்துக்கு மாணவர்கள் ஏராளமானோர் வந்த¤ருந்தனர். அவர்கள் விஜயகாந்திடம் கை குலுக்கி போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். ‘நீங்கள் பள்ளிக்கு செல்லுங்கள். இங்கே நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது என்று மாணவர்களுக்கு விஜயகாந்த் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

No comments:

Post a Comment