Thursday, November 24, 2011மீனம்பாக்கம் : இன்று அதிகாலை 5.20 மணிக்கு இலங்கையிலிருந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த சண்முகராஜா (35) என்பவர் சுற்றுலா விசா மூலம் சென்னைக்கு வந்தார். சந்தேகத்தின் பேரில் அவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரது சூட்கேசில் கறுப்பு பேப்பரால் சுற்றப்பட்டிருந்த பார்சல் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது 350 கிராம் எடை கொண்ட 5 தங்க பிஸ்கெட் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.13 லட்சம். இதையடுத்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
போலிக்கடவுச் சீட்டுப் பயன்படுத்திய நான்கு இலங்கையர்கள் கைது!
போலிக் கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்திய நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திரா காந்தி விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியாக இந்தியக் கடவுச் சீட்டுக்களைத் தயாரித்து அதனைப் பயன்படுத்தி பாரிஸிற்கு செல்ல முற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் பாரிஸ் செல்வதற்காக தலா மூன்று லட்ச ரூபா முற்பணம் செலுத்தியுள்ளதாகவும், மிகுதி எட்டு லட்ச ரூபா பாரிஸில் தரையிறங்கிய பின்னர் செலுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
விஜயலதா என்ற பெண் முகவரின் ஊடாக இவர்கள் போலி கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். குறித்த பெண்ணும் அதே விமானத்தில் பயணம் செய்யவிருந்ததாகவும், அந்தப் பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திடீரென சுகவீனமடைந்த காரணத்தினால் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment