Friday, November 18, 2011பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட செயற்பாடு குறைந்த தொழில் முயற்சிகள் மற்றும் குறைபயன்பாடுடைய சொத்துக்களுக்கு புத்துயிரளிக்கும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில் முயற்சிகளைத் தவிர்ந்த வேறு எந்தவொரு தொழில் முயற்சியையும் பொறுப்பேற்பதற்கான நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என செயலகம் வலியுறுத்தியுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் வேறு தொழில் முயற்சிகளையும் சொத்துக்களையும் கையேற்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியாகும் செய்திகள் போலியான, ஆதாரமற்ற செய்திகள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் அரசியலமைப்பிற்கு ஏற்புடையதா என்பது குறி்த்த சட்டம் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பொறுப்பேற்கப்படவுள்ள சொத்துக்களின் பட்டியல் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தொழில் முயற்சிகளுக்கு மாத்திரம் சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் மட்டுப்படுத்தப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் மத்தியில் அநாவசியமான அச்சத்தைத் தோற்றுவிக்கும் அரசியல் நோக்கத்துடன் மேலும் பல தொழில் முயற்சிகளை பொறுப்பேற்க அரசாங்கம் தயாராவதாக போலியான ஊடகத் தகவல்கள் வெளியிடப்படுவதாக ஜனாதிபதி செயலகம் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment