Friday, November 18, 2011

செய்தி இணைய தளங்கள் கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்!

Friday, November 18, 2011
செய்தி இணைய தளங்கள் கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இலங்கை மக்கள் பற்றி செய்திகளையும் தகவல்களையும் வெளியிடும் இணைய தளங்கள் ஊடக அமைச்சில் பதி செய்து கொள்ள வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொய்யான தகவல்களையோ, அநாகரீகமான விடயங்களையோ பிரசூரம் செய்யும் இணைய தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் நலனுக்கு எதிராக சில இணைய தளங்கள் செயற்பட்டு வருவதாக ஊடக அமைச்சிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இலங்கை மக்களுக்கு செய்திகளை வழங்கும் இணைய தளங்கள் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய இணைய தளங்களை, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் முடக்கியுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment