Tuesday, November 29, 2011அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி சந்தேகநபர்கள் நேற்றிரவில் இருந்து உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
அவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் அதனை நிராகரித்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 50 பேர் வரை இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி சந்தேக நபர்களிடமிருந்து 19 கையடக்கத் தொலைபேசிகள்கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டப்ளியூ.கொடுப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment