Tuesday, November 29, 2011

பாதுகாப்பை அதிகரிக்க மலேசிய டாக்ஸிகளில் பெண் டிரைவர்கள்!

Tuesday, November 29, 2011
கோலாலம்பூர் : பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க மலேசிய டாக்ஸிகளில் பெண் டிரைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பெண்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் அதிகரித்து வரும் கொலை, கற்பழிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்களும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும். பெண்கள் பயம் இல்லாமல் எந்த நேரத்திலும் தனியாக பயணிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. தனியாக வரும் பெண் சுற்றுலா பயணிகளுக்கு பெண் டிரைவர்கள் பெரிதும் உதவியாக இருப்பார்கள். இந்த திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment